தேடுக:
வறியோர்க்கு உணவு
1990 இரண்டாவது தமிழ்ப்பள்ளி இன்சுடேல் நகரத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்ட ஆண்டிற்கு அடுத்த ஆண்டிலிருந்து வறியோர்க்கு உணவு நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்து வருகின்றது. ஆண்டிற்கு ஓரிரு முறையாக இருந்தது கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டிற்கு ஆறு முறை என
| 1. சுறவம் (தை) சனவரி – நன்றி கூறும் நாள் – பொங்கல் (ஐம்பெரும் ஆற்றலெனப்படும் “அண்டவெளி, நிலம்” மற்றும் உணவு தரும் உழவர், உடன் உழைக்கும் மாடு, உறவினர்க்கு நன்றி) எனவும், | Link 1 Link 2 |
| 2. மீனம் (பங்குனி) மார்ச்சு – வசந்தத்தை வரவேற்போம் எனவும், | Link 1 Link 2 |
| 3. மேழம் ( சித்திரை) மே – கோடையை வரவேற்போம், நினைவு நாள் (2009 லிருந்து தமிழீழத்தில் இலங்கை அரசின் இரணுவத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட 160000 த்திற்கும் மேற்பட்ட உறவுத்தமிழர் நினைவு) எனவும், | Link 1 Link 2 |
| 4. கடகம் (ஆடி) சூலை – ஆடிப் பெருக்கு (ஐம்பெரும் ஆற்றலெனப்படும் “நீரு”க்கு) நன்றி எனவும், | Link 1 Link 2 |
| 5. கன்னி (புரட்டாசி) செப்டம்பர் – அண்ணாமலைத் தீபம் – (ஐம்பெரும் ஆற்றலெனப்படும் “நெருப்”பிற்கு) நன்றி எனவும், | Link |
| 6. நளி (கார்த்திகை) நவம்பர் தமிழர் நன்றி கூறும் நாள் ( இலக்கண, இலக்கியமளித்த அறிஞர், நாடு, மானம் காத்தளித்த மாவீரர்க்கு நன்றி) எனவும் | Link |
தன்னார்வத் தமிழ் பெற்றோர், தமிழ் பள்ளி மாணாக்கர் (பள்ளி நிலைக்கல்வி என்பதோடு, செயல் வழிக்கல்வி என்ற நிலையில்) பங்கேற்றலுடனும் மனநிறைவோடு நடைபெற்று வருகின்றது.
நிகழ்வன்று வரும் வறிய விருந்தினர் அடிப்படை வாழ்வு முன்னேற்றம் கருதி
உணவிற்குப் பின்னர் நம் முன்னவர் வள்ளளுவரின் தேவையான குறள் கருத்து (ஆங்கில பதிப்பு, தமிழர் விளக்க உரையும்) அளிக்கப்படுகின்றது. அவற்றின் பதிவு உடன் உள்ளது.
தொடர்புகொள்க: