தமிழ்க்கல்விச்சாலைகள் (தோற்றமும் வளர்ச்சியும்)
- 9-12-1987 வடமேற்கு பல்கலைகழகத்தில் முதல் தமிழ்ப்பள்ளி ஆரம்பம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வகுப்பு.
- 1988 இலக்ரேஞ்சு Y.M.C.A. இரண்டாவது தமிழ்ப்பள்ளி இரு ஞாயிறுக்கு ஒரு முறை ஆரம்பம்
- 1990 இரண்டாவது தமிழ்ப்பள்ளி இன்சுடேல் நகரத்திற்கு இட மாற்றம்.
- 1994 இரண்டாவது தமிழ்ப்பள்ளி இடேரியனுக்கு இட மாற்றம்
- 2000 கெர்ணி தமிழ்ப்பள்ளி ஆரம்பம்
- 2003 சாம்பர்க்கு, நேப்பர்வில், மில்வாக்கி தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பம்
- 2004 இடெசுபிளெயின்சு தமிழ்ப்பள்ளி ஆரம்பம்.
- 2004 அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் இல்லியனாய்சு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டது.
- 2005 மன்சுடர் தமிழ்ப்பள்ளி ஆரம்பம்
- 2006 இரண்டாவது தமிழ்ப்பள்ளி இடேரியனில் “கிருத்துவ ஆலய ஞாயிறு பள்ளி” இடத்திற்கு மாற்றம்
- 2006-2007 புளுமிங்டன் தமிழ்ப்பள்ளி, சாம்பெய்ன்சு தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பம்.
- 2008-2009 புளுமிங்டன் தமிழ்ப்பள்ளி நிர்வகிக்க சரியானவர் இன்மையால் மூடப்பட்டது.
- 2011 -2012 பியோரியா தமிழ்ப்பள்ளி, மத்திய இந்தியானா தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பம்.
- 2012-2013 மத்திய இந்தியானா தமிழ்ப்பள்ளி அமெரிக்க தமிழ் அமைப்பிற்கு மாற்றப்பட்டது.
- 2013-14 பியோரியா தமிழ்ப்பள்ளி, சாம்பெயின்சு தமிழ்ப்பள்ளிகள் அமெரிக்க தமிழ் அமைப்பிற்கு மாற்றப்பட்டன.
- 2013 அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் இல்லியனாய்சு மாநிலக்கல்வித் துறையினால் அங்கீகாரம் செய்யப்பட்ட அமைப்பானது.
தமிழ்க்கல்விச்சாலைகள் இன்றைய அமைப்பு
- பரந்து நிற்கும் ஆலமென விழுதுவிட்டு தாய்மொழிக்கல்வியைத் தாங்கிநிற்க அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் இன்று ஏழு நகரங்களில் இரு வாரத்திற்கு ஒரு வகுப்பு என வார இறுதி நாட்களில் இயங்கி வருகின்றன.
- இடேரியன் தமிழ்ப்பள்ளி – சிகாகோவின் மேற்கில் இடேரியன் நகரம், இல்லியனாய்சு மாநிலத்து அமைந்துள்ளது.
- இடெசுபிளெய்ன்சு தமிழ்ப்பள்ளி – சிகாகோவின் வடமேற்கில் இடெசுபிளெய்ன்சு நகரம், இல்லினாய்சு மாநிலத்து அமைந்துள்ளது.
- கெர்ணி தமிழ்ப்பள்ளி – சிகாகோவின் நேர் வடக்கில் கெர்ணி நகரம், இல்லியனாய்சு மாநிலத்து அமைந்ததுள்து.
- மில்வாக்கித் தமிழ்ப்பள்ளி – மில்வாக்கியின் புறநகர் பகுதியான – பீவாக்கி நகரம், விசுகான்சின் மாநிலத்து அமைந்ததுள்ளது.
- மன்சுடர் தமிழ்ப்பள்ளி – மன்சுடர் நகரம், இந்தியானா மாநிலத்து வடமேற்கு பகுதியில் அமைந்தது.
- நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி – சிகாகோவின் மேற்கில் நேப்பர்வில் நகரம், இல்லியனாய்சு மாநிலத்து அமைந்துள்ளது.
- சாம்பர்க்கு தமிழ்ப்பள்ளி – சிகாகோவின் வடமேற்கில் சாம்பர்க்கு நகரம், இல்லினாய்சு மாநிலத்து அமைந்துள்ளது.
தமிழ்க்கல்விச்சாலைகளின் கல்வி அமைப்பு
- ஆறு பெரும் பிரிவுகளாகவும், அவை ஒவ்வொன்றும் இரு சிறு பிரிவுகளாகவும், ஒவ்வொன்றிற்கும் 20 வகுப்பு நாட்களைக் கொண்ட ஒரு ஆண்டு எனவும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மடங்கல் (ஆவணி) – செப்டம்பர் துவங்கி, விடை (ஆனி) – மே வரையிலும் அமைந்துள்ளன.
- துளிர்கள் (துளிர்கள் ஒன்று, இரண்டு)
- மொட்டுகள் (மொட்டுகள் ஒன்று, இரண்டு)
- அரும்புகள் (அரும்புகள் ஒன்று, இரண்டு)
- மலர்கள் (மலர்கள் ஒன்று, இரண்டு)
- கனிகள் (கனிகள் ஒன்று, இரண்டு)
- வித்துகள் (வித்து ஒன்று, இரண்டு)
- முதல் மூன்று ஆண்டுகள் தமிழ் எழுத்துகளின் (உயிர், மெய், உயிர்மெய்) முழுமையான பயிற்சிதனுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
- இரண்டாம் மூன்று ஆண்டுகள் முழுமையான தமிழ்ச்சொற்கள் கற்றலுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
- மூன்றாம் மூன்று ஆண்டுகள் முழுமையான சொற்றொடர் அமைப்பிற்கும், தமிழ் இலக்கணம் கற்றலுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
- நான்காம் மூன்று ஆண்டுகள் தன்னிச்சையான சிந்தனையுடன் தமிழ்மொழியைப் பயன்படுத்தும் திறமை வளர்க்கப் பயன்படுத்தப்படுகின்றது.
- எவ்வாறு “வித்துகள்” அடுத்தத் தலைமுறைக்கு வழி வகுக்கப் பயன்படுத்தபடுகின்றனவோ அவ்வாறே “வித்து” தமிழ்க்கல்வி நிலையை கற்றோர் அடுத்து வரும் தலைமுறையினருக்கு கற்றுத்தரும் தகுதியினை பெறுவர் என்ற தொலைநோக்கு எண்ணத்தோடு அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி அமைக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டு கல்வி நிலையையும், தகுதியையும் தரமிட்டு பார்த்திட வீட்டுப்பயிற்சிப் பாடங்களும், அரையாண்டுத் தேர்வுகளும், முழு ஆண்டுத் தேர்வுகளும், கோடை விடுமுறை நாட்களுக்கான பயிற்சித் தாள்களும் துணை நிற்கின்றன.
- தமிழ்க் கல்வி நிலைகளும், கற்றுக் கொள்வதும் பற்றி மேலும் அறிய இங்கே சுடக்கவும்
தமிழ்க் கல்வி நிலைகளும், கற்றுக் கொள்வதும்!
தமிழ்ப்பள்ளியில் உள்ள வகுப்பு நிலைகளில் ஒவ்வொரு மாணாக்கரும் அடிப்படையில் கற்றுத்தேர்ச்சி அடையும் நிலை
துளிர்கள் வகுப்பு – முக்கியத்துவம் தமிழ் உயிர் எழுத்துகள்
- அகர வரிசை 12 உயிர் எழுத்துகளையும் படிக்க, எழுதக் கற்றல்.
- தனது பெயரைத் தமிழில் சிறப்பாக தமிழ் எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி எழுதக் கற்றல்.
- 12 உயிர்களையும பயன்படுத்தி குறைந்த அளவு 3 சொற்களாகவது சொல்ல, எழுதக் கற்றல்.
- துளிர் வகுப்பில் குறைந்தது நான்கு பாடல்களையாவது கற்றல். பிறர் உதவியின்று பாடலைக்கூறவும்
பொருளையும் கற்றல். - துளிர் வகுப்பில் குறைந்தது நான்கு கதைகளையாவது முழுமையாகக் கற்றல். பிறர் உதவியின்று
கதைகளைக் கூறவும் கற்றல். கதையின் சாரத்தையும் புரியப்பயிற்சி அடையல். - தமிழில் கேட்கப்படும் சிறு, சிறு வினாக்களுக்குத் தமிழிலில் பதிலளிக்கக் கற்றல்.
- தமிழில் எண்கள் குறைந்தது 50 வரையில் சொல்லவும், தான் படிக்கவுள்ள புத்தகத்தில் பக்கங்களைக்
கண்டு பிடிக்கவும் கற்றல் - ஒவ்வொரு வகுப்பிலும் தான், தன் உறவுகள், மற்றும் நட்பு, தன் வீடு, போன்ற தலைப்புகளை தாமறிந்த
தமிழில் கூறப் பயிற்சி பெறல். - சில திருக்குறள்கள், அகர வரிசை ஆத்திச்சூடி, தமிழ்த்தாய் போன்றவைகளை மனப்பாடமாக கூறப்
பயிற்சி எடுத்தல்.
துளிர்கள் 2 வகுப்பு – முக்கியத்துவம் தமிழ் உயிர், மெய் எழுத்துகள்
- மெய்யெழுத்துகள் (18) யாவற்றையும் எவரின் உதவியின்றி கூறவும், எழுதவும் கற்றல்
- உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் யாவற்றையும் படித்த பாடல் மூலமாக கண்டு பிடிக்கக் கற்றல்.
- மெய் எழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் சொற்கள் கற்றல். எழுதவும் கற்றல்.
- படித்த பாடல்களின் சொற்கள் யாவற்றிற்கும் பொருள்களை முழுமையாக தெரிந்து கொள்ளக்கற்றல்.
- புதியதாக பாடல்கள் சில கற்றல். பொருளும் அறிதல்.
- புதியகதைகள் சில கற்றல், கதைகளின் பொருளும், கருத்தும் கற்றல்.சொல்லவும் கற்றல்.
- பழக்கத்தில் உள்ளப் பொருட்கள் கற்றல், அவற்றிற்கு நாலைந்து சொற்றொடர்கள் கூறும் திறன்
பெற்றல். - தமிழில் எண்கள் குறைந்தது 100 வரையில் சொல்லவும், பயன்படுத்தவும் கற்றல்.
- அதிகப்படியான திருக்குறள்கள் கற்றல் மனப்பாடமாகக் கூறவும் கற்றல். தமிழ்த்தாய் பாடலை
முழுமையாகக் கூறவும் பயிற்சி தொடர்தல்.
மொட்டுகள் வகுப்பு – முக்கியத்துவம் தமிழ் எழுத்துகள் யாவும்
- தமிழ் எழுத்துகள் முழுமையாக்கக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இந்த ஆண்டோடு இருக்கும்
என்பதால், 12 உயிர் எழுலத்துகள், 18 மெய் எழுத்துகள், 216 உயிர்மெய் எழுத்துகள் யாவற்றையும் சரிவர
எழுத, சரிவர ஒலியோடு கூறக்கற்றல். - படித்த எழுத்துகளையும் பயன்படுத்தி குறைந்த அளவு 10 சொற்களையாவது சொல்ல, எழுதக்
கற்றல். - சொல்லும், எழுதும் சொற்களைத் தவறின்றி எழுதச்செய்தலுக்கு கற்றுக்கொள்ளல்.
- இது வரையும் படித்த பாடல்களையும் நினைவு கொண்டு முழுமையாகக் கற்று உணர்ந்தல்.
- இது வரையும் படித்தப் படக்கதைப் போல புதிய படக்கதைகளைப் பொருளோடு கற்றல்.
- தமிழ் எண்கள் 20 வரையும் தமிழில் தவறின்றி எழுதக்கற்றல். 100 வரையும் பார்க்காமல்
சொல்லக் கற்றல். - பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்களில் நாலைந்து பொருட்களை பற்றி நாலைந்து
சொற்றொடர்கள் கூற, எழுதக்கற்றல். - அதிகப்படியான திருக்குறள்கள், தமிழ்த்தாய் பாடலை மனப்பாடமாகக் கூறவும் கற்றல்.
மொட்டுகள் 2 வகுப்பு – முக்கியத்துவம் தமிழ்ச் சொற்கள், மற்றும் வகை அமைப்பு
- இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் அதிகப்படியான எழுத்துகளைச் சேர்த்து
புதிய சொற்களைக் கற்றல். - கற்றச்சொற்களை பயன்படுத்தி சிறு சொற்றொடர்கள் சொல்ல, எழுத கற்றல்.
- கற்ற.பாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல்.
- பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்கள் நாலைந்து பொருட்களை பற்றி நாலைந்து
சொற்றொடர்கள் கூற, எழுதக்கற்றல். - பாடபுத்தகத்தில் இல்லாத கருத்தான கட்டுரைகள் படிக்க, பொருள் அறிந்து விவரம் கூறக்கற்றல்.
- தமிழ் அருஞ்சொற்கள் பல கற்று பொருளும் அறியக்கற்றல்.
- தமிழ் இலக்கணம் வழி எழுத்துகள், முழுமையான வகைகள், எழுத்துகளின் இணைப்பில் உண்டாகும்
சொற்கள் வகைகள், அறிதல்,கற்றல். - பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்கள் நாலைந்து பொருட்களை பற்றி நாலைந்து
சொற்றொடர்களில் எழுதி வந்து, வகுப்பில் கூறக்கற்றல். - தொடர்ந்து திருக்குறள்கள், தமிழ்த்தாய் பாடலை மனப்பாடமாகக் கூறவும், பொருள் கூறவும் கற்றல்.
அரும்புகள் வகுப்பு – முக்கியத்துவம் தமிழ்ச் சொற்கள், மற்றும் வகைகள் அமைப்பு
- தொடர்ந்து இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் மேலும் அதிகப்படியான
எழுத்துகளையும் சேர்த்து புதிய சொற்களைக் கற்றல். - கற்றசொற்களை பயன்படுத்தி மூன்று சொற்களாவது உள்ள சொற்றொடர்கள் சொல்ல, எழுதக் கற்றல்.
- தொடர்ந்து கற்ற பாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல். பொருள் உணர்ந்து
கூறக்கற்றல். - பழக்கத்தில் உள்ள, தெரிந்த அன்றாட பொருட்களை பற்றி நாலைந்து சொற்றொடர்கள் கூற,
எழுதக்கற்றல். - பாடபுத்தகத்தில் இல்லாத கருத்தான கட்டுரைகள் படித்து பொருள் அறிந்து விவரம் கூறக்கற்றல்.
- தாம் கற்கும் பாடல்கள், கட்டுரைகளில் காணும் அருஞ்சொற்களின் பொருள் கற்று, அவற்றை
பயன்படுத்தக் கற்றல். - தமிழ் இலக்கணம் வழி தொடர்ந்து, எழுத்துகளின் இணைப்பில் உண்டாகும் சொற்கள் வகைகளிலுள்ள,
மேலும் பல அறிதல், கற்றல். - பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்கள் நாலைந்து பொருட்களை பற்றி நாலைந்து
சொற்றொடர்களில் எழுதி வந்து வகுப்பில் ஆசிரியருடன் உரையாட பயிற்சி எடுத்தல். - தொடர்ந்து திருக்குறள்கள் , தமிழ்த்தாய்ப் பாடலை மனப்பாடமாகக் கூறவும், பொருள் கூறவும் கற்றல்.
அரும்புகள் 2 வகுப்பு – முக்கியத்துவம் தமிழ்ச் சொற்கள், மற்றும் வகைகள் அமைப்பு
- தொடர்ந்து இது வரையும் கற்ற சொற்களை அல்லாது சொற்களில் மேலும் அதிகப்படியான
எழுத்துகளைச் சேர்த்து புதிய சொற்களைக் கற்றல். - கற்றசொற்களை பயன்படுத்தி மூன்று, மேற்பட்ட சொற்களாவது உள்ள சொற்றொடர்கள் தொடர்ந்து
சொல்ல, எழுத கற்றல். - தொடர்ந்து கற்றபாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல். பொருள் உணர்ந்து
கூறக்கற்றல். - பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருட்களை கொண்டு தொடர்ந்து நாலைந்து சொற்றொடர்கள்
கூற, எழுதக்கற்றல். - பாடபுத்தகத்தில் இல்லாத, கருத்தான கட்டுரைகள் தொடர்ந்து படிக்க, பொருள் அறிந்து விவரம்
கூறக்கற்றல். - தாம் கற்கும் பாடல்கள், கட்டுரைகளில் மேலும் பல அருஞ்சொற்களின் பொருள் கற்று, அவற்றை
பயன்படுத்தக் கற்றல். - தொடர்ந்து பல்வேறு இலக்கணப் பகுதிகளை கற்றல். சொற்கள் இணைந்து சொற்றொடர்
அமைக்கவும், அமைப்பிற்கு தேவையான இலக்கணம் அறிதல், கற்றல். - தொடர்ந்து பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்கள் நாலைந்து பொருட்களை பற்றி நாலைந்து
சொற்றொடர்களில் எழுதி வந்து வகுப்பில் ஆசிரியருடன் உரையாட பயிற்சி எடுத்தல். - தொடர்ந்து திருக்குறள்கள் , தமிழ்த்தாய்ப் பாடலை மனப்பாடமாகக் கூறவும், பொருள் கூறவும் கற்றல்.
மலர்கள் வகுப்பு – முக்கியத்துவம் இலக்கணம், சொற்றொடர் அமைப்பு
- தொடர்ந்து இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் மேலும் அதிகப்படியான
எழுத்துகளைச் சேர்த்து புதிய சொற்களைக் கற்றல். - கற்றசொற்களை பயன்படுத்தி மூன்றிற்கு மேற்பட்ட சொற்களாவது உள்ள சொற்றொடர்கள்
தொடர்ந்து சொல்ல, எழுதக் கற்றல். - தொடர்ந்து கற்றபாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல். பொருள் உணர்ந்து
கூற, எழுதக் கற்றல். - பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பழக்க வழக்கங்கள் பற்றி நாலைந்து சொற்றொடர்கள் கூற,
எழுதக்கற்றல். - பாடபுத்தகத்தில் இல்லாத கருத்தான கட்டுரைகள் – தமிழ், தமிழர் வாழ்வு, வரலாறு படிக்க, பொருள்
அறிந்து விவரங்கூற, எழுதக்கற்றல். - தாம் கற்கும் பாடல்கள், கட்டுரைகளில் மேலும் பல அருஞ்சொற்களின் பொருள் கற்று, அவற்றை
பயன்படுத்தக் கற்றல். - தொடர்ந்து பல்வேறு இலக்கணப் பகுதிகளை கற்றல். அமைப்பிற்கு தேவையான இலக்கணம்
அறிதல், கற்றல். - தொடர்ந்து பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்களில் நாலைந்து பொருட்களை பற்றி
நாலைந்து சொற்றொடர்களில் எழுதி வந்து வகுப்பில் ஆசிரியருடன் உரையாட பயிற்சி எடுத்தல். - தொடர்ந்து திருக்குறள்கள் , தமிழ்த்தாய்ப் பாடலை மனப்பாடமாகக் கூறவும், பொருள் கூறவும்
எழுதவும் கற்றல்.
மலர்கள் 2 வகுப்பு – முக்கியத்துவம் இலக்கணம், சொற்றொடர் அமைப்பு
- தொடர்ந்து இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் மேலும் அதிகப்படியான
எழுத்துகளைச் சேர்த்து புதிய சொற்களைக் கற்றல். - கற்றசொற்களை பயன்படுத்தி மூன்றிற்கு மேற்பட்ட சொற்களாவது உள்ள சொற்றொடர்கள் தொடர்ந்து
சொல்ல, எழுதக்கற்றல். - தொடர்ந்து கற்றபாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல். பொருள் உணர்ந்து
கூற எழுதக்கற்றல். - பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பழக்க வழக்கங்கள் பற்றி நாலைந்து சொற்றொடர்கள் கூற,
எழுதக்கற்றல். - பாடபுத்தகத்தில் இல்லாத கருத்தான கட்டுரைகள் தொடர்ந்து படிக்க, பொருள் அறிந்து விவரம்
கூறக்கற்றல். ஆங்கில மொழியாக்கமும் கற்றல். - தொடர்ந்து பல்வேறு இலக்கணப் பகுதிகளை கற்றல். சொற்கள் இணைந்து சொற்றொடர்
அமைக்கவும், அமைப்பிற்கு தேவையான இலக்கணமும் அறிதல், கற்றல். - தொடர்ந்து பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட கருத்துகளை தலைப்புகள் பலவற்றைப் பற்றி
சொற்றொடர்களில் எழுதி வந்து வகுப்பில் உரையாட பயிற்சி எடுத்தல். - தொடர்ந்து திருக்குறள்கள், தமிழ்த்தாய்ப் பாடலை மனப்பாடமாகக் கூறவும், தமிழில் பொருள் கூறவும்
கற்றல்.
கனிகள் வகுப்பு – முக்கியத்துவம் இலக்கணம், சொற்றொடர் அமைப்பு
- தொடர்ந்து இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் மேலும் அதிகப்படியான
எழுத்துகளைச் சேர்த்து புதிய சொற்களைக் கற்றல். - கற்றசொற்களை பயன்படுத்தி மூன்றிற்கு மேற்பட்ட சொற்களாவது உள்ள சொற்றொடர்கள் தொடர்ந்து
சொல்ல, எழுதக்கற்றல். - தொடர்ந்து கற்றபாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல். பொருள் உணர்ந்து
கூறத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதக்கற்றல். - பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பழக்க வழக்கங்கள் பற்றி நாலைந்து சொற்றொடர்கள் கூற,
எழுதக்கற்றல். - பாடபுத்தகத்தில் இல்லாத கருத்தான கட்டுரைகள், சங்கத்தமிழ் பாடல்கள் படிக்க, பொருள் அறிந்து
விவரம் கூறக் கற்றல். ஆங்கில மொழியாக்கமும் கற்றல். - தொடர்ந்து பல்வேறு இலக்கணப் பகுதிகளை கற்றல். சொற்கள் இணைந்து சொற்றொடர்
அமைக்கவும், அமைப்பிற்கு தேவையான இலக்கணமும் அறிதல், கற்றல். - தொடர்ந்து பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட கருத்துகளை பலவற்றைப் பற்றி சொற்றொடர்களில்
எழுதி வந்து வகுப்பில் மற்ற மாணாக்கருடனும், ஆசிரிநருடனும் உரையாடப் பயிற்சி எடுத்தல். - தொடர்ந்து திருக்குறள்கள், தமிழ்த்தாய்ப் பாடலை மனப்பாடமாகக் கூறவும், ஆங்கிலத்தோடு தமிழில்
பொருள் கூறவும் எழுதவும் கற்றல்.
கனிகள் 2 வகுப்பு – முக்கியத்துவம் இலக்கணம், சொற்றொடர் அமைப்புகள்
- தொடர்ந்து இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் மேலும் அதிகப்படியான
எழுத்துகளைச் சேர்த்து புதிய சொற்களைக் கற்றல். - கற்றசொற்களை பயன்படுத்தி மூன்றிற்கு மேற்பட்ட சொற்களாவது உள்ள சொற்றொடர்கள் தொடர்ந்து
சொல்ல, எழுதக்கற்றல். - தொடர்ந்து கற்றபாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல். பொருள் உணர்ந்து
கூறத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதக்கற்றல். - பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பழக்க வழக்கங்கள் பற்றி நாலைந்து சொற்றொடர்கள் கூற,
எழுதக்கற்றல். - பாடபுத்தகத்தில் இல்லாத கருத்தான கட்டுரைகள் தொடர்ந்து படிக்க, பொருள் அறிந்து விவரம்
கூறக் கற்றல். ஆங்கில மொழியாக்கமும் கற்றல். - தம் கருத்துகளை வெளிப்படுத்தி கூற, எழுதக் கற்றல்.
- தொடர்ந்து பல்வேறு இலக்கணப் பகுதிகளைக் கற்றல். சொற்கள் பல இணைந்த சொற்றொடர்
அமைக்கவும், அமைப்பிற்கு தேவையான இலக்கணமும் அறிதல், கற்றல். - தொடர்ந்து பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட கருத்துகளை பலவற்றைப் பற்றி சொற்றொடர்களில்
எழுதி வந்து வகுப்பில் உரையாட பயிற்சி எடுத்தல். - தொடர்ந்து திருக்குறள்கள், தமிழ்த்தாய்ப் பாடலை மனப்பாடமாகக் கூறவும், தமிழில் பொருள் கூறவும்
கற்றல்.
வித்துகள் வகுப்பு – முக்கியத்துவம் தமிழ் சொற்கள், வகைகள், சொற்றொடர் அமைப்பு
- தொடர்ந்து இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் மேலும் அதிகப்படியான
எழுத்துகளைச் சேர்த்து புதிய சொற்களைக் கற்றல். - கற்றசொற்களை பயன்படுத்தி நான்கிற்கு மேற்பட்ட சொற்களாவது உள்ள சொற்றொடர்கள் தொடர்ந்து
சொல்ல, எழுதக்கற்றல். - தொடர்ந்து கற்றபாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல். பொருள் உணர்ந்து
கூறத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதக்கற்றல். - கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழறிஞர்கள் வாழ்வு கட்டுரைகள் படித்து, அவர் பற்றி அறிந்து
விவரங்கூறக் கற்றல், ஆங்கில மொழியாக்கமும் கற்றல். - தாம் விரும்பிய, கற்ற கருத்துகளை வெளிப்படுத்தி கூற, எழுதக் கற்றல்.
- தொடர்ந்து பல்வேறு இலக்கணப் பகுதிகளை விரிவாகக் கற்றல். சொற்கள் பல இணைத்து
சொற்றொடர் அமைக்கவும், அமைப்பிற்கு தேவையான இலக்கணமும் அறிதல், கற்றல். - சான்றோர்கள் உரைப்பதிவுகளைக் கேட்டு, புரிந்துணர்ந்து அவற்றின் சாரத்தை தம் வாய்மொழியில்
கூறக் கற்றல். - தொடர்ந்து பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட கருத்துகளை (இலக்கியத்தையும்) பலவற்றைப் பற்றி
சொற்றொடர்களில் எழுதி வந்து வகுப்பில் உரையாட பயிற்சி எடுத்தல். - தொடர்ந்து திருக்குறள்கள், தமிழ்த்தாய்ப் பாடலை மனப்பாடமாகக் கூறவும், தமிழில் பொருள் கூறவும்
கற்றல்.
வித்துகள் 2 வகுப்பு – முக்கியத்துவம் தமிழ் சொற்கள், வகைகள், சொற்றொடர் அமைப்பு
- தொடர்ந்து இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் மேலும் அதிகப்படியான
எழுத்துகளைச் சேர்த்து புதிய சொற்களைக் கற்றல். - கற்றசொற்களை பயன்படுத்தி நான்கிற்கு மேற்பட்ட சொற்களாவது உள்ள சொற்றொடர்கள் தொடர்ந்து
சொல்ல, எழுதக்கற்றல். - தொடர்ந்து கற்றபாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல். பொருள் உணர்ந்து
கூறத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதக்கற்றல். - கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழறிஞர்கள் வாழ்வு கட்டுரைகள் படித்து, அவர் பற்றி அறிந்து
விவரங்கூறக் கற்றல். ஆங்கில மொழியாக்கமும் கற்றல். - தாம் விரும்பிய, கற்றக் கருத்துகளை வெளிப்படுத்தி கூற, எழுதக் கற்றல்.
- தொடர்ந்து பல்வேறு இலக்கணப் பகுதிகளை கற்றல். சொற்கள் பல இணைத்து சொற்றொடர்
அமைக்கவும், அமைப்பிற்கு தேவையான இலக்கணமும் அறிதல், கற்றல். - சான்றோர்கள் உரைப்பதிவுகளைக் கேட்டு, புரிந்துணர்ந்து அவற்றின் சாரத்தை தம் வாய்மொழியில்
கூறக் கற்றல். - தொடர்ந்து பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட கருத்துகளை (இலக்கியத்தையும்) பலவற்றைப் பற்றி
சொற்றொடர்களில் எழுதி வந்து வகுப்பில் உரையாட பயிற்சி எடுத்தல். - தொடர்ந்து திருக்குறள்கள், தமிழ்த்தாய்ப் பாடலை மனப்பாடமாகக் கூறவும், தமிழில் பொருள் கூறவும்
கற்றல்.