நேப்பர்வில்–மலர்கள்1
மலர்கள் வகுப்பு – முக்கியத்துவம் இலக்கணம், சொற்றொடர் அமைப்பு
- தொடர்ந்து இது வரையும் கற்ற சொற்கள் மட்டுமில்லாது சொற்களில் மேலும் அதிகப்படியான
எழுத்துகளைச் சேர்த்து புதிய சொற்களைக் கற்றல். - கற்றசொற்களை பயன்படுத்தி மூன்றிற்கு மேற்பட்ட சொற்களாவது உள்ள சொற்றொடர்கள்
தொடர்ந்து சொல்ல, எழுதக் கற்றல். - தொடர்ந்து கற்றபாடல்களையும் விட பொருள் நிறைந்த பாடல்களைக் கற்றல். பொருள் உணர்ந்து
கூற, எழுதக் கற்றல். - பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பழக்க வழக்கங்கள் பற்றி நாலைந்து சொற்றொடர்கள் கூற,
எழுதக்கற்றல். - பாடபுத்தகத்தில் இல்லாத கருத்தான கட்டுரைகள் – தமிழ், தமிழர் வாழ்வு, வரலாறு படிக்க, பொருள்
அறிந்து விவரங்கூற, எழுதக்கற்றல். - தாம் கற்கும் பாடல்கள், கட்டுரைகளில் மேலும் பல அருஞ்சொற்களின் பொருள் கற்று, அவற்றை
பயன்படுத்தக் கற்றல். - தொடர்ந்து பல்வேறு இலக்கணப் பகுதிகளை கற்றல். அமைப்பிற்கு தேவையான இலக்கணம்
அறிதல், கற்றல். - தொடர்ந்து பழக்கத்தில் உள்ள தெரிந்த அன்றாட பொருள்களில் நாலைந்து பொருட்களை பற்றி
நாலைந்து சொற்றொடர்களில் எழுதி வந்து வகுப்பில் ஆசிரியருடன் உரையாட பயிற்சி எடுத்தல். - தொடர்ந்து திருக்குறள்கள் , தமிழ்த்தாய்ப் பாடலை மனப்பாடமாகக் கூறவும், பொருள் கூறவும்
எழுதவும் கற்றல்.
வகுப்புகளின் நிலை