
பதினேழாம் ஆண்டு நிறைவு நாளிற்கு அழைப்பு
May 10 2025 at 11:00 am – 07:00 pm
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் பதினேழாம் ஆண்டு நிறைவு நாளிற்கு தமிழ்ப்பள்ளிகளில் இவ்வாண்டு படித்து வரும் மாணாக்கர்கள் உங்களையும், உங்கள் பெற்றோர்களையும்
அன்புடன் அழைப்பது
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்
(வருமான வரி விலக்கு பெற்ற நிறுவனம்)
Thamizh Schools USA
(A Regd. Not for Profit, Tax Exempt 501©(3) Organization)
ஆண்டு நாள்: காரி(சனி)க்கிழமை, மேழம் (சித்திரை) 27,
தி. ஆ. 2056 – மே 10, 2025
காலம்: காலை 11:00 முதல் மாலை 7:00 மணி வரை
(பகல் உணவு ஏற்பாடு: அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்)
1. ஆண்டு நாளில் தமிழ்ப்பள்ளியில் இவ்வாண்டு படித்துவரும் மாணக்கர்களும், ஆசிரியர்களும், அவர்கள் இல்லத்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
2. ஆண்டு நாள் “நிகழ்வுகள் மற்றும் போட்டிகளிலும்” தமிழ்ப்பள்ளியில் தற்போது படித்துவரும் மாணாக்கர்கள், மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே பங்கு பெறலாம்.
3. நிகழ்வுகள் (பாடல்கள், கதைகள் கூறல், சிறு நாடகங்கள், உரையாடல்) யாவும் தமிழில் மட்டுமே இருத்தல் வேண்டும்.
(பின்பாடலுக்கு ஆடப்படும் நடனம், மற்றும் பக்தி, மதம் திரைப்பட இணைப்புடையவைகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்).
மாணாக்கர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளமையால் (தனியே செய்யக்கூடிய நிகழ்வுகளைத் தவிர்க்கவும்.) நிகழ்வுகள் குழுக்கள் (குறைந்தது ஐந்து மாணக்கர்கள்) நிகழ்ச்சிகளாக மட்டுமே இருத்தல் வேண்டும் ஒவ்வொரு பள்ளிக்கும் குறிப்பிட்ட அளவு நேரம் மட்டுமே ஒதுக்கப்படும்..
ஆண்டு நாள் பதிவு மற்றும் விவரங்கள் (தமிழ்ப்பள்ளி இணையத்தில் அறிவிக்கப்படும் – தொடர்ந்து இணைத்தைப் பார்க்கவும். )
பதிவு செய்தவர்கள் மட்டுமே ஆண்டு நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும்
4. போட்டிகள் அ, ஆ பள்ளிகளில் நடைபெறும். இறுதி போட்டிகள் அரங்கத்தில் நடைபெறும்.
அ. திருக்குறள் ஒப்பித்தல்: அதிகப்படியான திருக்குறள்
கூறும் 10 மாணாக்கர்களுக்கு (சொல்லப்படும் குறள்கள்
எண்ணிக்கைத் தகுந்தவாறு) பரிசுகள் தரப்படும். 10 வயதும் அதற்கு
மேலும், 10 வயதிற்கு கீழ், என்று இரு பிரிவுகள் உண்டு.
10ம், 10 வயதிற்கு மேல், – ஐந்து பரிசுகள்
1000 திருக்குறள்களுக்கு மேல் – குறளுக்கு ஒரு தாலர்
850 திருக்குறள்களுக்கு மேல் – குறளுக்கு 75 காசுகள்
660 திருக்குறள்களுக்கு மேல் – குறளுக்கு 50 காசுகள்
350 திருக்குறள்களுக்கு மேல் – குறளுக்கு 25 காசுகள்
200 திருக்குறள்களுக்கு கீழ் – ஆறுதல் பரிசுகள்
பத்து வயதிற்கு கீழ் – ஐந்து பரிசுகள்
660 திருக்குறள்களுக்கு மேல் – குறளுக்கு ஒரு தாலர்
500 திருக்குறள்களுக்கு மேல் – குறளுக்கு 75 காசுகள்
350 திருக்குறள்களுக்கு மேல் – குறளுக்கு 50 காசுகள்
200 திருக்குறள்களுக்கு மேல் – குறளுக்கு 25 காசுகள்
100 திருக்குறள்களுக்கு கீழ் – ஆறுதல் பரிசுகள்
பரிசு பெறும் மாணாக்கரின் பெற்றோர்க்கும் பரிசுகள் உண்டு.
ஆ. தமிழ் எழுத்து, சொற்கள், சொற்றொடர்கள் போட்டி:
கொடுக்கப்பட்ட தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி
அதிகப்படியான சொற்களைக் கூறல், எழுதல்.
சொற்றொடர்களை எழுதல். (வகுப்பு வாரியான போட்டி
துளிர்கள், துளிர்கள் 2, மொட்டுக்கள் 1 & 2, அரும்புகள்
அதற்கு மேற்பட்ட வகுப்புகள்)
இறுதிப்போட்டிகள் (இ, ஈ. உ, ஊ) அரங்கத்தில் நடைபெறும்.
இ. சொற்(ல்)சிலம்பம்: குழுமியுள்ள ஒரு மாணவர் ஒரு தமிழ்ச்
சொல்லைக் கூற, வரிசையில் அடுத்து உள்ள மாணவர்
சொல்லப்பட்ட சொல்லின் கடைசியாக உள்ள எழுத்தில்
(சொல்லிற்கு முன் வரக்கூடியது) ஆரம்பித்து வேறு ஒரு
புதிய சொல்லைக் கூறவேண்டும். (சொல்லாதவர்
போட்டியிலிருந்து நீக்கப்படுவார்)
போட்டிக்கான உதாரணம் :
முதல் சொல் அம்மா – கடைசி எழுத்து மா
இரண்டாவது சொல் மாமரம் கடைசி எழுத்து ம
அடுத்த சொல் ம வில் ஆரம்பிக்கவேண்டும்
ஈ. “தமிழ்த்தேனீ” போட்டி
(வகுப்பு வாரியான போட்டி துளிர்கள், துளிர்கள் 2 ,மொட்டுக்கள் 1 ,மொட்டுக்கள் 2, அரும்புகள் அதற்கு மேற்பட்ட வகுப்புகள்.)
உ. “சொல்லாட்சி” திருக்குறள் கதை கூறும் போட்டி
ஊ. “பேச்சுப்போட்டி” – கொடுக்கப்பட்டத் தலைப்புகளிருந்து.
(வகுப்பு வாரியான போட்டி)
போட்டிகளுக்கான பின் குறிப்பு: தமிழ்ப்பள்ளிகள் மாணாக்கர்களுக்கு போட்டிகளுக்கான முழுமையான விவரங்களும், பரிசு விரங்களும் தனியே அனுப்பி வைக்கப்படும்..
5. பள்ளிகளின் பெருநிகழ்வுகள் பலவும் உண்டு – விவரம் பின்னர்
ஆண்டு நாள் நிகழ்வுகளை ஏற்பாடுகள் செய்ய ஓவ்வொரு தமிழ்ப்பள்ளியிலும் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிக்கப் படுவார்கள். மாணக்கர்கள் அவர்கள் வழியாக மட்டுமே ஆண்டு நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலும்.
ஆண்டு நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளையும் பயிற்சிகளையும் செய்ய ஆரம்பிக்க ஆசிரியர்களையும், பெற்றோர்கள் உங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
மற்ற விவரங்களுக்கு thamizhppalli2003@yahoo.com வழி தொடர்பு கொள்ளவும்
நன்றி,
அன்புடன்
தமிழ்ப்பள்ளி ஆண்டு நாள் குழு